வீட்டுத்தோட்டத்தில் உள்ளிச் செய்கை

0

வீட்டுத்தோட்டத்தில் உள்ளி பயிரிடுவோம். அல்லது
வலை வீட்டினுள் உள்ளிச் செய்கை.
நாங்களும் உள்ளி பயிரிடுவோமா ?

விதை உள்ளியில் இருந்து 8 முதல் 10 மிமீ விட்டம் மற்றும் 4 கிராமிற்கும் அதிகமான நிறை கொண்ட பூண்டு பற்களை தெரிவு செய்ய வேண்டும்.

நடுவதற்கு முன்பு பூண்டுகளை முதலில் நீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். குமிழ்ப் பரிகரணம் செய்ய வேண்டும்.

விதைப்பற்களை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் நடுகைக்குப் பயன்படுத்த வேண்டும்.

அக்டோபர் – நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நட வேண்டும். நீர்வடிப்புள்ள மண் உகந்தது. விதைக் காய்களை வரிசைகளுக்கு இடையில் 15 செ.மீ. இடைவெளியிலும், வரிசையில் 10 செ.மீ இடைவெளியிலும் நடுகை செய்ய வேண்டும்.

உள்ளியின் வளர்ச்சி காலத்தில் 7 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறையும், முதிர்ச்சியடையும் போது 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மழைக்காலத்தில் வடிகால் வசதி செய்து நிலத்திலிருந்து நீரை வடிப்பை ஏற்படுத்துவது அவசியம்.

நடுகை செய்த 45வது நாள் மேற்கட்டுப்பசளை இட வேண்டும்.

நடுகை செய்த 120 முதல் 130 நாட்களுக்குள் தாள்கள் மஞ்சளாக மாறியபின் அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு முன்பே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும். அறுவடைக்கும் பின் புகை மூட்டம் செய்யப்பட்டு பூண்டுகள் பாதுகாக்கப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.