இன்றைய ராசி பலன் – 25-11-2020

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். தேவையற்ற வாக்கு வாதங்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமையும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சுமாராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில்முறை போட்டி பொறாமைகள் குறையும். பகைவர்களும் நண்பர்களாக மாற கூடுவர். பெண்களுக்கு ஆடம்பர செலவுகளை சமாளிக்க வேண்டிய பொறுப்புகள் கூடும். சுயதொழில் புரிபவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல், டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியத்துடன் செயலாற்றக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. நண்பர்களுக்காக சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் ஆகலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பாக இருப்பதால் இதுவரை இருந்து வந்த துன்பங்கள் யாவும் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் களில் ஈடுபடாமல் அமைதியுடன் இருப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை ஈடுபடுத்தும் முன் எச்சரிக்கை தேவை. பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டு. பெண்களுக்கு கவனச்சிதறல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. சுய தொழில் புரிபவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அளிக்க கூடிய வகையில் அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக காணப்படும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்த உறவுகள் ஒன்று பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடன் தொகைகள் படிப்படியாக குறைய கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான நேரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றகரமான நாளாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் ஆலோசிக்காமல் எடுப்பது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பார்த்த இடத்திலிருந்து வரங்கள் அமையக்கூடும். வெளியூர் தொடர்பான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனக்கவலை மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத தனவரவு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபமான நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு அதிகமாக வாய்ப்புகள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்னோன்யம் அதிகரிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமற்ற பலன்கள் உண்டு. ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தெளிவான சிந்தனை பிறக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதக பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு. ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் வீண் விரயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

Leave A Reply

Your email address will not be published.