வவுனியாவில் விபத்து: ஒருவர் காயம்

0

வவுனியா , ஹொறவப்பொத்தான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

வவுனியா நகரிலிருந்து ஹொறவப்பொத்தானை வீதி நோக்கி வருகை தந்த பட்டா வாகனம் பூந்தோட்டம் பகுதியிலிருந்து நகருக்குச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.