இன்றைய ராசி பலன் – 20-04-2021

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் எப்போதோ செய்த ஒரு நல்ல காரியம் வழியாக நன்மைகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டகால கனவுகள் நிறைவேறும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சிறந்த பலனை கொடுக்கும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் உங்களுடைய குணத்திற்கு சற்று பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படாமலிருக்க எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிதாக தேக்கம் ஏற்படாது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் காணப்படும். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. எனக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முடிவுகள் சாதகப் பலன் கொடுக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல்சோர்வு ஏற்படும். தேவையான ஓய்வு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியமாகும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் இனிமையான சொற்களை பயன்படுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய காலம் இது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மேலும் வலு ஆகும் என்பதால் எச்சரிக்கை தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அலைச்சல் ஏற்பட்டாலும் லாபம் உண்டாகும். இடமாற்றம் போன்ற விஷயங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்வது நலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. சக பணியாளர்கள் மூலம் அதிர்ஷ்டம் வரும். கூட்டு தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக அமையும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை மதிப்புடன் நடத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான தொடர்பு உண்டாகும். விநாயகரை வழிபடுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சில விஷயங்கள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரம் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மட்டும் செலுத்தினால் முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டு மறையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும் யோகமுண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். எது சரி எது தவறு என்ற முடிவுக்கு வருவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தயாள குணம் நன்மைகளை கொடுக்கும். எவருக்கும் அஞ்சாத உங்களுடைய ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டு முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது. இனிமையாக பேசும் எவரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.