சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி

0

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது .

பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது .

வீட்டிலிருந்து தொழிலுக்காக , மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது  

 வீட்டிற்குள் நடைபெறும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களுக்கு ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை அனுமதி வழங்கப்படமாட்டாது . அத்துடன் , ஒன்று கூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது .

பதிவுத் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் , அதன்போது 10 பேருக்கு மாத்திரம் குறித்த திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

அத்துடன் , எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ன்னர் திருமண மண்டபங்களில் 50 நபர்களுக்கு மேற்படாத வகையில் அல்லது மண்டப் கொள்ளளவில் 25 சதவீதமானோரை உள்ளடக்கியதாகத் திருமண வைபவங்களை நடத்த சுகாதார வழிகாட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

எனினும் , குறித்த திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மரண சடங்குகளில் கலந்துகொள்ள ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது . எனினும் , 16 ஆம் திகதிக்கு பிறகு மரண சடங்குகளில் கலந்துகொள்ள ஒரே சந்தர்ப்பத்தில் 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் .

சமய ஸ்தலங்கள் , கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை . பாடசாலைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய 200 க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை முதல் கட்டமாகத் திறக்க முடியும் . பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்க முடியும் .

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்கும் எமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை அனுமதிக்கப்பட மாட்டாது .

பொதுப் போக்குவரத்தின்போது ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் , அதிசொகுசு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் வளி சீராக்கலை இயக்குவதை தவிர்த்து ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்துப் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

முன்பள்ளிகளை 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு முன்னெடுக்க முடியும் .

பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.