மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற உலக சிறுவர் தினம்.

0
(01-10-2021) –உலக சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) காலை மாந்தை மேற்கு  பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
-மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சிறுவர் மற்றும்  மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் டெனிசியஸ் கனியூட்  அரவிந்தராஜ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது உதவி பிரதேச செயலாளர் எஸ். டிலக்ஸ்சன்  மற்றும் கிராம அலுவலர் , அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது  கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பலா மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலக வளாகத்துக்குள் மர நடுகையும் நடை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.