பிக்பாஸ் சீசன் 5 இன் 18 போட்டியாளர்களும் இவர்கள் தான் – வெளியாகியது உறுதியான தகவல்

0

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒனறான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மேலும் இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது. இதன் 5 வது சீசன் வருகிற அக்டோபர் 3 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கியது போல் பிக் பாஸ் 5வது சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். அத்தோடு இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் அடிக்கடி உலா வந்துகொண்டு இருக்கிறது.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு, நடிகர் நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன், நடிகை பவானி ரெட்டி, பாடகி சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி ஆகிய பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

அதே போல், ஷகீலா மகள் மிலா,மாடல் நடியா, நடிகை சூசன், கோபிநாத் ரவி, நிரூப் நந்தா, விஜே அபிஷேக், மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சிபி சந்திரன், நமீதா மாரிமுத்து, பாடகி இசைவாணி, நடிகர் வருண் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாகக் கூறப்படுகின்றது. இது 90% சதவீதம் உறுதியான தகவல் என்று, பல ஊடக வட்டாரங்கள் இணையத்தில் தெரிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.