இன்றைய ராசி பலன் – 11-10-2020

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்வு மனதிற்குள் ஏற்படும். சுபகாரிய நிகழ்வுகள் கைகூடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு யோகம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். தொழில் ரீதியான முன்னேற்றம் மந்தநிலை இருந்தாலும் எதிர் நீச்சல் போட்டாவது சமாளித்துவிடுவீர்கள். பெண்கள் வேலையில் கவனக்குறைவாக இல்லாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்கொள்ளும் துணிச்சல் உண்டாகும். தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் வலுபெற வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடையே மனக்கசப்புகள் உருவாக சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் பொறுமையுடன் கையாளுவது நல்லது. சிறு சிறு பிரச்சனைகள் பூதாகரமாகி பெரிதாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. முடிந்த வரை யாரிடமும் சண்டையிடாமல் மானத்தை கடைபிடிப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தை தரும் அமைப்பாக இருந்தாலும் சில விஷயங்களில் போராட்டம் காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் காண முடியும். கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். பெண்களுக்கு தேவையான புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதற்கு
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயத்தில் சாதகமான பலனுண்டு. தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக இருக்கும். பெண்கள் கவனக்குறைவால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். நண்பர்கள் ஒத்துழைப்பு பலமாக இருக்கும். எவ்வளவு பிரச்சினைகளையும் சமாளித்துவிடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். கிரக நிலைகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலாளர்கள் முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது உத்தமம். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பெண்களுக்கு தாய் வழி உறவு மூலம் அனுகூலமான பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல ஓய்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான அலைச்சல் மற்றும் டென்ஷன் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகளை சமாளிப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண பாதிப்புகள் உண்டாகக்கூடும் எனவே எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீக ரீதியான விஷயம் அதற்கு வாய்ப்புகள் உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். உங்களின் இரக்க குணத்தால் பல நல்ல பலன்களை அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்தில் சாதகப் பலன்கள் கிடைக்கும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தை சந்திக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களின் விடா முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். இயற்கையில் விரக்தியை சந்தித்த நீங்கள் இன்றைய நாளில் புது உற்சாகத்தை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த வேலையும் செய்யக்கூடாது. சில விஷயத்தில் நீங்கள் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பதை உணர்வதற்கு.வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு தொழில்ரீதியான பகைவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இனிய நாளாக அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் ரீதியான போட்டிகள் அதிகரித்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் மன அமைதி பிறக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்லது நடக்கும். வார்த்தைகளை விடுவதற்கு முன் சிந்திப்பது மிகவும் நல்லது. கணவன்-மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் மேலோங்கும். பணவரவு திருப்திகரமாக அமையும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.