இன்றைய ராசி பலன் – 12-10-2020

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய நண்பர்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெண்கள் தனிமையை உணர்வீர்கள். அடுத்தவர்களின் மனம் நோகக் கூடாது என்று நினைக்கும் நீங்கள் பலவீனமாக உணர்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு தொடர்பான விஷயத்தில் சாதகப்பலன் காண்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. தன் கையே தனக்கு உதவி என்பதை புரிந்துகொள்வீர்கள். சுற்றி இருக்கும் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் பல முறை சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் ஒரு முறைக்கு நூறுமுறை யோசித்து விட்டு முடிவெடுப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பகைவர்கள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். உங்களின் நேர்மை மற்றும் பொறுமை அடுத்தவர்களை எளிதாக கவர்ந்து விடும். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு நல்லதெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் அலைச்சல்களை சந்தித்தாலும் வெற்றி கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் சாதகப்பலன் காண்பீர்கள். தெரியாத விஷயங்களை தேடி தேடி அலைவதில் நாட்டம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற் கொள்வதால் அனுகூலமான பலன்களை காணலாம். உற்றார் உறவினர்களின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ளும் அற்புதமான நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையேயான பிணக்குகள் படிபடியாக நீங்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி உண்டாகும். உடலில் வயிறு மற்றும் முதுகு தொடர்பான விஷயங்களில் தொந்தரவுகள் ஏற்படலாம். உண்ணும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளால் சுபகாரியங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். சுற்றி இருக்கும் அனைவரையும் அலசுவதில் கோட்டை விடும் நீங்கள் சில சங்கடங்களை சந்திக்கலாம். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை அமைதியைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏமாற்றத்தைச் சந்திக்க கூடிய நாளாக இருக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்பதுபோல சூழ்நிலை உருவாகும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்ல பலன் தரும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்ல பலன் தரும். தொழில் புரிபவர்கள் நண்பர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் வேடிக்கையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரும் அமைப்பாக இருக்கிறது. திடீர் எதிர்பாராத பண வரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய வரவை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் சீராகி அன்பு அதிகரிக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.