நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

0

மினுவங்கொட கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை 1397 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் புதிதாக 90 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

அவர்களுள் 40 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்கள் எனவும் 50 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் துருக்கியில் இருந்து வருகை தந்த விமான சேவை ஊழியர்கள் இருவரும் நேற்றைய கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4844 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 1514 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.