இன்றைய ராசி பலன் – 14-10-2020

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயத்தில் காலதாமதமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இறுதியில் வெற்றி உங்களுக்குத்தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தக்க சமயத்தில் தோள் கொடுக்கும் தோழர்கள் உதவி புரிவார்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் வீட்டுக்கு தேவையான விஷயங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் சிலருக்கு தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். தொழில் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்தபடி எதிர்பார்த்தவைகள் நடக்கும். பெண்கள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு சண்டை சச்சரவுகள் தோன்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியை தரும். தொழில் ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும் படைக்கப்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் நேர்மையான குணத்திற்கு கிடைக்கக்கூடிய வெற்றியாக அமைய இருக்கிறது. சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையேயான நெருக்கம் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் எல்லா வகையிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதக பலன் தரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச் சுமையை சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் குழப்பங்கள் நிறைந்து காணப்படும். வேண்டாம் என்று நினைக்கும் காரியங்கள் சற்று தள்ளி வைப்பது மிகவும் நல்லது. உங்களைப் பற்றிய சுயமதிப்பீடு நீங்களே போட்டுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுடைய வேளையில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெற்றியை நோக்கிய பயணத்தில் சாதகப் பலன்கள் உண்டாகும். தேவையற்ற வீண் சகவாசங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தின் பணிபுரிபவர்கள் ஒரு முடிவை எடுக்கும் முன் பலமுறை ஆலோசிப்பது நல்லது. தொழில்ரீதியான முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் உற்சாக மற்றும் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். எதிர்பாராத நபர்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்ற பழமொழிக்கு இணங்க இன்றைய நாள் அமையும். உத்யோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் தரும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் நல்ல வெற்றி காண்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை மணமுடியும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கை தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தன வரவு திருப்திகரமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எவரையும் குறை கூறுவதை இன்றைய நாளில் தவிர்ப்பது உத்தமம்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.