கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டிடத்தொகுதி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

0

கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டிடத்தொகுதி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த சந்தைக் கட்டிடத் தொகுதியானது 2.42மில்லியன் ரூபாய் செலவில் கரைச்சி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டது

இந்நிகழ்வானது கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முறிப்பு பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து ஒன்றும் வெளியிட்டிருந்தார்.

மேலும் தெரிவிக்கையில் ஊடகவியலாளர்கள் காடையர்களால் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை சரியாக பேணுமாக இருந்தால் அந்த காடையர்கள இவ்வளவு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக ஐனாதிபதிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.