தற்போது நாட்டில் கொரோனா தொடர்பான நிலை.

0

திவுலப்பிட்டிய கொவிட் கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1723 ஆக அதிகரித்துள்ளது.

திவுலப்பிட்டிய கொவிட்-19 கொத்தணியில் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 132 பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஐந்து பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள். எஞ்சிய 127 பேர், தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் இணங்காப்பட்ட திவுலுபிட்டிய மொத்த தொற்றாளர்களுள் 1041 பேர் கைத்தொழிற்சாலை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 682 பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று காலை டோஹா கட்டாரில் இருந்து 34 பேர் இலங்கை வந்துள்ளதுடன் அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 88 முகாம்களில் 9703 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இலங்கையில் இதுவரையில் 5170 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் அவர்களுள் 3357 பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் 1800 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.