தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் இராணுவத் தளபதி.

0

கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் வெளியாகும் புள்ளிவிபரங்களை அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நோயாளிகள் காணப்படும் பகுதிகளில் அவசியமென்றால் ஊரடங்கைப் பிறப்பிப்பதற்கு அரசாங்கம் தயார் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் காணப்படும் நிலைமையை அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டுள்ளோம் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.