ஊடகவியலாளருக்க நீதிகோரி முல்லைத்தீவில் திரண்ட வடமாகாண ஊடகவியலாளர்கள்.

0

முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்தல் காரர்களால் கடுமமையாக தாக்கப்பட்டமையினை கண்டித்து வடமாகாண ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
மாவட்ட செயலத்திற்கு முன்னால் ஆரம்பமான கவனயீர்ப்பு போரட்டத்தில்
வனவளத்திணைக்களவே வேலிக்கு தேக்குமரம் வேடிக்கை பாக்கிறாயா?
காவல்துறையா கள்ளமரம் வெட்டும் துறையா.
ஊடக அமைச்சரே உறக்கமா?
கள்ளமரம் வெட்டுபவர்களுக்கு காவல் வனவளத்திணைக்களமா?
போன்ற கோசங்களை தாங்கியவாறான பாதாதைககள் மற்றும் மரக்கன்றுகள்,வெட்டப்பட்ட பட்ட மரக்கிழைகளை கையில் தாங்கியவாறு ஊடகவியலாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பேணி கவனயீர்ப்பு கோசங்களை சொல்லியவாறு முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்றடைந்துள்ளார்கள்
அங்கு மாவட்ட உதவி பொலீஸ் அத்தியட்சகர் றுவான் குமராசேகர அவர்களிடம் ஊடகவியலாளர்களின் கோரிக்கை அடங்கிய மனு வாசிக்கப்பட்டு உடகவியலாளர்களால் கையளித்துள்ளதுடன் காடு அழிக்கப்படுவததை தடுக்ககோரி மரக்கன்று ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குள் கவனயீர்ப்பு பேரணியாக சென்ற ஊடவியலாளர்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கான மனுவினை உதவி மாவட்ட செயலாளர் எஸ்.கேகிதா அவர்களிடம் கையளித்துள்ளதுடன் மரக்கன்ற ஒன்றினையும் வழங்கிவைத்துள்ளார்கள்.
தொடர்ந்து… முல்லைத்தீவு மாவட்ட வனவள பாதுகாப்பு த்திணைக்கள அலுவலகம் சென்ற ஊடகவியலாளர்கள் அங்கு உயர் அதிகாரிகள் இல்லாதநிலையில் ஊடகர்கள் தாக்கப்பட்டமைக்கு தங்கள் எதிர்பினை தெரிவித்து வனவளத்திணைக்கள உயர் அதிகாரிகளுக்கான மனு ஒன்றினை உத்தியோகத்தர்களிடம் கையளித்துள்ளதுடன் வனவளத்திணைக்களத்திற்கு முன்பாக உள்ள வீதியில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டிவைத்துள்ளார்கள்.
வடக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவ படுத்தும் ஊடகவியலாளர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.