ஊடகத்துறையை சுகந்திரமாக செயற்பட வைப்பதே ஜனநாயகம்

சட்டத்தரனி டினேஸன் தெரிவிப்பு

0
ஊடகத்துறையை எப்போது சுகந்திரமாக செயற்படவைப்பதே ஜனநாயகமாகும் அவ்வாறு ஊடகசுகந்திரத்தை கேள்விகுறி ஆக்குபவர்களுக்கு சட்டரீதியான தண்டனை ஒன்றே தீர்வு என தமிழரசு கட்சியின் இளைஞர் அணி உப தலைவரும் சட்டத்தரணியுமாகிய டினேஸன் தெரிவித்துள்ளார்
ஊடகங்களுக்கு இன்று அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஒரு நாட்டில் சட்டவாக்கத்துறை, நிர்வாகத்துறை , நீதித்துறை என்ற வரிசையில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுவது ஊடகத்துறையாகும்.  ஒரு நாட்டில் நீதித்துறை எவ்வாறு சுகந்திரமாக செயற்படுவது முக்கியமோ அதேபோன்று ஊடகத்துறையும் சுகந்திரமாக செயற்படுவது இன்றியமையாததாகும்.
முல்லை ஊடகவியலாளர்கள் தவசீலன்,குமணன் ஆகியோர் தாக்கப்பட்டமை ஜநாயகத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.
முல்லை ஊடகவியலாளர்கள் கடுமையாக தாக்கியதை வன்மையாக கண்டிப்பதோடு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதோடு ஊடக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் ஊடாக துறை சுகந்திரமாக செயற்பட இடமளிக்க  வேண்டும் எனவும்
இவ்வாறு உண்மையின் பக்கம் செயற்படும் ஊடகவியளாலர்களுக்கு எதிராக திட்டமிட்டு மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தும் குற்றவாளிகள் சார்பாக இன்று அல்ல என்றும் நீதியின்பால் நிற்கும் எந்த சட்டத்தரணிகளும் ஆஜராக கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.