தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான வழக்கு 20 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது!

0

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இரண்டு ஊடகவியாலார்களும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்காக செய்தி சேகரிப்பிற்கு சென்றுள்ள வேளை மரக்கடத்தல் காரர்களால் கடந்த 12 ஆம் திகதி தாக்கப்பட்டுள்ளர்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளது இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.தனஞ்சயன்,பார்த்தீபன்,ருசிக்கா,துஸ்யந்தி ஆகிய சட்டவாளர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதுடன் வழக்கில் பாதிக்கப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்களும் மன்றில் முன்னிலையாகியுள்ளார்கள்.

இதன்போது குறித்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை திகதியிடப்பட்டுள்ளது.

-முல்லைத்தீவு நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.