இன்றைய ராசி பலன் – 24-10-2020

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மன அமைதி தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெண்கள் தங்களுடைய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராயாமல் முடிவெடுப்பது நல்லது அல்ல. எதையும் தீர்க்கமாக யோசித்து பின் முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் உணர்ச்சிவசப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பொறுமையை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படுத்தும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகள் வெளி உலகிற்கு கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பகைவர்களின் முகத்திரை கிழியும். இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய புதிய முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். பெண்களுக்கு மிக காரியத்தை சாதித்துக் காட்டும் அற்புதமான அமைப்பாக இருக்கிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் தேவையற்ற செலவுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் உதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதனை கண்டு மனம் தளர்ந்து விடாமல் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வருத்தத்தை உண்டாக்கும். மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும் என்றாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய அங்கீகாரம் மறுக்கப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்றைய நாள் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தெம்பும் தைரியமும் உண்டாகும். தக்க சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஆலோசிக்க படவேண்டியவை யாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிலருக்கு பொறாமை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடன் பிரச்சினைகள் நீங்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதார சிக்கல்களை சமாளிக்கக்கூடிய வழிகள் கிடைக்கும். உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியான கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். கூட்டு தொழில் லாபம் தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தாமதமாக வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை மௌனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை நினைத்துக் கொள்வதன் மூலம் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சோர்வு உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. பெண்கள் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலுடன் செயல்படவேண்டிய நாளாக அமைய இருக்கிறது. ஒரு தவறு நடக்கும் பொழுது அதனை தட்டிக் கேட்பதற்கும் தயங்க கூடாது. உங்களை விட மூத்தவர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் போகும் சூழ்நிலை உருவாகலாம். மனம் தளராமல் விடாமுயற்சி உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.