இன்றைய ராசி பலன் – 25-10-2020

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் காரியத்திற்கு உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் காணப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதை சரியாக செய்து முடிப்பதும் மூலம் முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்கள் உங்களை எப்படி நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இன்முகத்துடன் செயல்படுவது முன்னேற்றம் தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நின்று எனது குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த சண்டைகள் குறைந்துவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் டென்ஷன் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபத்தை அதிகரித்துத் தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைகிறது. உங்களுடைய ராசிக்கு எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியாக முடியும். உங்களுடைய வேடிக்கையான பேச்சு மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தும். நண்பர்களுடன் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க புதிய முயற்சிகளை அல்லது திட்டங்களை தீட்டுவீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் தகுதிக்கு மீறிய பொறுப்புகளும் பிரச்சனையாக வந்து சேரலாம். எனவே வேலையில் கூடுதல் கவனம் தேவை. புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் வீண் விரயங்களை செய்யாமல் சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவை விட அக்கம்பக்கத்தினர் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்க பெறும். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நீண்ட நாள் கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உருவாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்கள் நட்போடு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு என்று என்றால் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். எனினும் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் சிறப்பான லாபம் உண்டாகும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கோபதாபங்களை தவிர்த்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக நடைபெறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் மூலம் அதிர்ஷ்டம் அடிக்கும். உத்தியோகத்தில் தேவையில்லாத அலைச்சல் டென்ஷனை கொடுத்தாலும் அனுகூலமான பலன் தரும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே நடைபெறும். பெண்களுக்கு பொறுமை இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம் எனவே எச்சரிக்கை தேவை.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.