கொழும்பிலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

0

கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேருந்து சேவைகள் தொடர்பாக நாளை மீண்டும் ஆலோசணைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கான தபால் ரயிலைத் தவிர ஏனைய தபால் ரயில் சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.