இன்றைய ராசி பலன் – 31-3-2021

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். முருகனை வழிபடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் ராஜயோகம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். கவலை தீர கால பைரவரை வணங்குங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி நிறையும். சுயதொழில் புரிபவர்கள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் வெற்றி உண்டு. ஈசன் வழிபாடு செய்யுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடனிருப்பவர்களே உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். சிறுதொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள் நல்லதே நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கோவிலுக்கு சென்று வாருங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் தன வரவும் உண்டாகும். சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையும். நந்தி வழிபாடு செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது பலன் தருவதாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்கள் தொல்லை நீங்கும். அம்பிகை வழிபாடு நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர், வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுப செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அமைதி இருக்கும். விஷ்ணு வழிபாடு நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத விஷயங்களைப் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தியானம் மேற்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கடன் நீங்க வழி பிறக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றியிருப்பவர்களின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரிபவர்கள் இன்னும் கூடுதல் முயற்சி செய்வது நல்லது. விநாயகரை வழிபட நன்மை பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லவர்கள் யார்? தீயவர்கள் யார்? என்பதை இனம் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனவுளைச்சல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை நீடிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை பொறுமை காப்பது நல்லது. புதிய மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மன அமைதி கிடைக்க அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

Leave A Reply

Your email address will not be published.