புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து

0

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக மேலதிக பஸ் மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையாக பயணிக்கும் எண்ணிக்கையை விட மேலதிகமாக ஆயிரத்து 192 அரச பஸ்களும் 21 ரயில்களும் சேவையில் ஈடுபடுகின்றன. மேலதிக ரயில்கள் 57 பயண சேவைகளில் ஈடுபடுகின்றன.

இதுதவிர ஆயிரத்து 800 தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மக்களுக்கு உயர்ந்தபட்ச சேவையை வழங்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு பஸ்களின் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிக்க வேண்டும். மோட்டார் வாகன பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை அவசியம் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave A Reply

Your email address will not be published.