வரையறையற்ற அதிவேக இணைய சேவை விரைவில்

0

வரையறையற்ற இணைய சேவைகளை வழங்குவதற்காக தொடர்புடைய சேவை வழங்குனர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தங்களது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வாரம் முதல் குறித்த பெக்கேஜை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணையதள சேவை வழங்குனர்கள் சமர்ப்பித்த திட்டங்களை பரிசீலித்த பிறகு, அவற்றை செயல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதனூடாக கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு அதிவேக இணைய வசதிகளை தொடர்ந்து வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.