மன்னார் மாவட்டத்தில் சமூக நல கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்-மன்னார் மாவட்டத்தில் 32,277 குடும்பங்கள் தெரிவு.

0
மன்னார் மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொவிட்-19 பாதீப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான  சமூக நல கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 10.30  மணியளவில்  மன்னார் பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சமூர்த்தி சமூதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் இடம் பெற்ற குறித்த கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல்,பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர்   உற்பட பிரதேசச் செயலக உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி அலுவலகர்கள் ,பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  ஆரம்ப நிகழ்வின் போது வைபவ ரீதியாக 5 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் சமூர்த்தி பயனாளிகள் குடும்பம், குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பம், முதியோர் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் ,அங்கவீன கொடுப்பனவு, சிறு நீரக நோய் காரணமாக கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் குடும்பங்கள் என 5 கட்டமாக 32 ஆயிரத்து 277 குடும்பங்கள் குறித்த 5 ஆயிரம் ரூபாய் நிதியை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆரம்ப நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த கொடுப்பனவுகள் விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு,மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு , மடு அகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட  பயனாளிகளுக்கு உரிய சமூர்த்தி அலுவலகர்கள் ஊடக உடனடியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.