இன்றைய ராசி பலன் – 13-04-2021

0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த சில விஷயங்கள் எதிராக நடைபெறும். மனதிலிருக்கும் குழப்பங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்க இறை வழிபாடுகளில் ஈடுபடுவது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை ஓரளவுக்கு குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சுப காரியங்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளின் ஆதரவு கிடைத்து மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கருணை மிகுந்த உங்களுடைய ராசிக்கு அனைத்தும் நல்லவையாக நடக்கும். சுபகாரிய சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் வரவு செலவு சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் அமோகமாக வெற்றி கிடைக்கும். நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது அதிவாகவும் இருக்கும். சுய தொழிலில் பங்குதாரர்கள் இடையே இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் யோகம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வரும் புதிய விஷயங்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் மீது இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் தொழில்ரீதியான பகைவர்கள் நீக்கி விடுவார்கள். உத்யோகத்தில் மன அமைதி உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத வாக்குவாதங்களில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரக்கூடும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. நீண்டநாள் நண்பர்களை சந்திக்க வாய்ப்புக்கள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்து சில விஷயங்கள் எதிர்மாறாக நடக்கும். சாதகமற்ற அமைப்பு என்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிடங்களில் கவனமுடனிருப்பது நல்லது. புதிய சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதிக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான யோகம் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் பாராட்டுகளை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

Leave A Reply

Your email address will not be published.