பொருட்களின் விலை அதிகரிப்பால் கலை இழந்த புதுவருடம்

0
நாளைய தினம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் வெறிசோடிய நிலையிலும் வர்தக நிலையங்கள் மக்கள் வரவும் இன்றி காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக ஒழுங்கான வேலை வாய்ப்புகள் மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் மந்தமான நிலையில் காணப்படுவதாலும் பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுவதாலும் இம் முறை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை மன்னார் மாவட்ட மக்கள் பெரும்பாலும் தவிர்த்துள்ளனர்
அதே நேரத்தில் இம்முறை விவசாய செய்கையிலும் விவசாயிகளுக்கு நிர்ணய விலை இன்மையால் பல்வேறு பதிப்புக்கள் மத்தியில் மன்னார் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிகம் ஆர்வம் காண்பிக்கவில்லை
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு என அதிக அளவு மக்களின் வரவை தாங்கள் எதிர்பார்த்த பொதிலும் மக்களின் வரவு குறைந்து காணப்படுவதால் பெரும் சிரமத்திற்கும் நஸ்ரத்துக்கும் உள்ளாகியுள்ளதாக மன்னார் மாவட்ட வர்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.