உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் விசேட திருப்பலி-

ஆயலத்திற்கு இராணுவம்,கடற்படை விசேட பாதுகாப்பு.

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் விசேட திருப்பலி-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை(21) காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன் போது ஏப்ரல் 21 இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக  இறைபிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
-இதன் போது பாடசாலை மாணவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, கத்தோலிக்க தேவாலயங்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதூகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர் நிருபர்-

 

 

 

Leave A Reply

Your email address will not be published.