உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்கு மன்னாரில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல்.

0
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற   தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களின் 2 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நேற்றைய தினம் புதன் கிழமை (21) மாலை 5 மணியளவில் மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.
-தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மாலை அனுவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சர்வ மத தலைவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.