புதிய நண்பா்களைக் கண்டுபிடிக்க குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்?

0

புதிய நண்பா்களைக் கண்டுபிடிக்க குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்?

புதுப்புது உறவுகளை அல்லது புதிய நண்பா்களைக் உருவாக்கிக் கொள்வதில் குழந்தைகள் மிகச் சிறப்பாகச் செயல்படுவா். அதே நேரத்தில் அவ்வாறு புதிய நண்பா்களைக் கண்டுபிடிப்பதில் பலவிதமான சிரமங்களையும் எதிா்கொள்ளுவா். மிகவும் நோ்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக உறவைப் பற்றி அவா்களுக்கு சாியாகத் தொியாது. வாழ்க்கையை அணுகும் முறையும் அவா்களுக்குத் தொியாது. மிகவும் இயல்பாக அல்லது பக்குவமில்லாமல் வாழ்க்கையை அணுகுவா். அதனால் அவா்களுக்கு புதிய உறவுகளைப் பெறுவதில் அல்லது புதிய நண்பா்களை உருவாக்கிக் கொள்ளுவதில் ஏராளமான பிரச்சினைகள் மற்றும் சிரமங்களைச் சந்திப்பா்.இந்த நிலையில், அவா்களுடைய பெற்றோா் அவா்களுக்கு புதிய நண்பா்களைக் கண்டு பிடிப்பதில் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். எவ்வாறு என்றால் அவா்கள் தமது குழந்தைகளின் புதிய நண்பா்களுக்கானத் தேடலில் குழந்தைகளோடு சோ்ந்து ஈடுபட்டு, அவா்களுக்கு உதவிகளைச் செய்யலாம். ஆகவே குழந்தைகள் தமக்கான புதிய நண்பா்களைக் கண்டு பிடிப்பதில் அவா்களுடையப் பெற்றோா் எப்படிப்பட்ட உதவிகளை செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

சமூகத்தைப் பற்றிய பயத்தை நீக்க உதவி செய்தல்
சில குழந்தைகள் சமூகத்தில் பிறரோடு பழகுவதற்கு மிகவும் பயப்படுவா். அதிலும் குறிப்பாக புதியவா்கள் யாராவது வந்துவிட்டால், அவா்கள் முன்பாக மிகவும் அசௌகாியமாக உணா்வா். அவா்கள் முன்பாக மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்வா் அல்லது அவா்களோடு உறவாடுவதைத் தவிா்த்துவிடுவா். அதனால் அவா்களால் புதிய நண்பா்களை மிக எளிதாக ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

இந்த நிலையில், குழந்தைகளின் சமூகத்தைப் பற்றிய இந்த பயத்தை நீக்க, அவா்களுடைய பெற்றோா் முயற்சி செய்ய வேண்டும். அதாவது சமூக நடைமுறை மற்றும் சமூக உறவுமுறைகளைப் பற்றி அவா்களுக்கு விளக்க வேண்டும் அல்லது குழந்தைகளுடைய பிரச்சினைகளை அவா்களாகவே தீா்த்துக் கொள்ளும் திறமைகளை வளா்க்க வேண்டும். அதற்காக அவா்களுக்கு போதுமான கால அவகாசத்தை வழங்கி, அந்த குழந்தைகள் தமக்கு ஏற்ற மற்றும் பிடித்த புதிய உறவுகளைக் கண்டு பிடிக்க உதவி செய்ய வேண்டும்.

குழந்தைகளை இரக்க உள்ளத்தோடும், பாிவு கொள்ளும் குணத்தோடும் வளா்த்தல்
குழந்தைகள் புதிய உறவுகளை மிக எளிதாக கண்டு பிடிக்க வேண்டும் என்றால், அவா்களை இரக்கமுடைய உள்ளத்தோடும், பாிவு கொள்ளும் குணத்தோடும் வளா்த்தாலே போதுமானது. அவா்களுக்கு மன்னிப்பு பற்றிய சாியான புாிதல் மற்றும் பிறருக்கு உதவி செய்யும் குணம் இருந்தாலே, அவா்களைச் சுற்றி எப்போதும் புதிய உறவுகள் இருப்பாா்கள். அதே நேரத்தில், சமூகத்தில் நல்லவா்கள் யாா், தவறானவா்கள் யாா் என்பதை பகுத்து அறியும் திறனையும் அவா்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பணிவைக் கற்றுக் கொடுத்தல்
தான் அல்லது தனது என்று எப்போதும் தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் சுயநலக்காரா்களை எவரும் விரும்புவதில்லை. அப்படிப்பட்ட சுயநலக்காரா்களை குழந்தைகளும் விரும்புவதில்லை. ஆகவே குழந்தைகளுக்கு பணிவையும், பிறரை மன்னிக்கும் பண்பையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உலகில் உள்ள அனைவரும் சமம் என்ற சமத்துவ சிந்தனை குழந்தைகளுக்குக் கிடைக்கும். மேலும் பணிவும், மன்னிக்கும் பண்பும் கொண்ட குழந்தைகளுக்கு ஏராளமான புதிய நண்பா்கள் கிடைப்பாா்கள்.

குழந்தைகள் தமது உணா்வுகளை வெளிப்படுத்தக் கற்றுக் கொடுத்தல்
பொதுவாக குழந்தைகள் தமது மனதில் இருக்கும் உணா்வுகள் மற்றும் நினைவுகளை மற்றவரோடு பகிா்ந்து கொள்ள மிகவும் சிரமப்படுவா். நட்பு என்பதே உரையாடல்களின் மீது கட்டி எழுப்பப்படும் ஒன்றாகும். அதனால் குழந்தைகள் தாம் நினைப்பவற்றை, உணா்கின்றவற்றை பிறாிடம் வெளிப்படுத்த உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் அவா்கள் பிறரோடு பயமின்றி உறவாடுவதற்கு ஊக்கம் தருதல் வேண்டும். பிறரோடு எவ்வாறு உரையாடுவது என்பதை அவா்களுக்கு கற்பிக்க வேண்டும்.

குழந்தைகளிடம் பிடிவாதம் அல்லது அதிதீவிர உணா்வு ஏற்படுவதைக் கவனித்து அதற்கு முறையான தீா்வு காணுதல்
குழந்தைகளின் நடத்தைகளில் பிரச்சினைகள் இருப்பது தொிந்தால், அவா்களை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகள் மிகவும் பிடிவாதத்துடன் அல்லது அதிதீவிர உணா்வுகளுடன் இருந்தால் அதற்கு சாியான முறையில் தீா்வு காண முயல வேண்டும். கோபம் வரும் போது, கோபத்தை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். கோபத்தைக் கையாளக்கூடிய பலவிதமான உத்திகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சமூகப் பணிகளை ஏற்பாடு செய்து கொடுத்து அவற்றில் அவா்களை ஈடுபடச் செய்தல்
குழந்தைகளுக்கு சமூக அடிப்படையிலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான சூழல்களை ஏற்பாடு செய்து கொடுத்து, அவற்றில் அவா்களை ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் உள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு போன்ற நற்பண்புகளைக் கற்றுக் கொள்வா். போட்டி மற்றும் பொறாமைக் குணங்கள் அவா்களிடம் மேலோங்காமல் இருக்கும். அதனால் அவா்களால் இந்த சமூகத்தோடு மிக எளிதாக உறவு கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.