நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பான விபரங்கள்

0

இன்று (22) காலை வரையில் இலங்கையில் 578 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 51 பேரும் மற்றும் வெளிநாட்டவர்கள் 11 பேரும் உள்ளடங்குவர்.

ஏனைய 516 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பதுடன், இவர்களில் பெரும்பாலானோர் குருநாகல் மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 171 ஆகும்.

இதற்கமைய புத்தளம் மாவட்டத்திலிருந்து 51 பேரும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து தலா 43 பேர் வீதமும் பதிவாகியுள்ளனர். ஏனைய 251 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (22) காலை வரையிலும் மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொத்தணி மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,938 ஆகும். இவர்களில் 92,268 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

வேளை, இன்று (22) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 98,049 பேர் என்பதுடன், அவர்களில் 93,667 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் இன்று காலை (22) வரையிலும் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் 3,752 தொற்றாளர்கள் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்று (22) காலை 6.00 மணி வரையிலும் கடந்து 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 121 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இன்று (22) காலை வரையிலும் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் வென்னப்புவ, இரத்தினபுரி, ஜா-எல, களனி மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்படி, இன்று (22) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தினம் வரையிலும் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 107 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,666 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றைய (21) தினம் 7,548 பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.