மெசிடோ நிறுவனத்தினால் பாரம்பரிய நஞ்சற்ற விதைகள் தோட்ட செய்கைக்காக கையளிப்பு

0
கிராமிய ரீதியில் விவசாய செய்கையை ஊக்குவிக்கும் முகமாகவும் நஞ்சற்ற விதைகள் ஊடாக இயற்கை முறையிலான விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் முகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட பெண்கள் குழுவினர் மற்றும் தோட்ட செய்கை முயற்சியாளர்களுக்கான விதைகள் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மடு/ பரசன்குளம் கிராம சேவகர் பிரிவில் வழங்கி வைக்கப்பட்டது
கிராம ரீதியில் பெண்கள் குழுவாக சுய தொழில் முயற்சி மற்றும் தோட்ட செய்கையில் ஈடுபட்டுவரும் 50 குடும்பங்களுக்கு மேற்படி விதைகள் வழங்கப்பட்டுள்ளது
பாரம்பரியமாக மரபனு மாற்றப்படதா இயற்கை முறையான வெண்டி,பயிற்றை,பாகல்,தக்காளி,புடலை,மிளகாய்,கீரை உட்பட பத்து வகையான விதை பொதிகள்  ஒவ்வொரு பயனாலருக்கும் வழங்கி வைக்கப்படமை குறிப்பிடதக்கது .
-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.