பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0

இந் நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போதைய நிலைமை காரணமாக, குழந்தைகள் பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டின் உள்ளேயே சிக்கியுள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் அடிக்கடி சாப்பிட முனைகிறார்கள்.

இதனால் இவர்கள், இனிப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது சிறந்தது.

அத்துடன், குழந்தைகள் எந்த வெளிப்புற நடவடிக்கைகளும் இல்லாமல் வீட்டின் உள்ளேயே இருப்பதால் குறைவான மாச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. இல்லை எனில், உடல் பருமனாக மாறக்கூடும். இது பல தொற்றா நோய்களையும் ஏற்படுத்துகின்றது என்றார்.

இதேவேளை, குழந்தைகளை ஒரே இடத்தில் இருக்க அனுமதிக்காமல் பல்வேறு செயற்பாடுகளுக்கு வழி நடத்துவது மிகவும் சிறந்தது.

அத்துடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிக பழுத்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வழி நடத்த வேண்டும் என்றும் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave A Reply

Your email address will not be published.