வாழ்க்கை குறுகியது, ஆனால் அழகானது, வாழ்வோம் , மகிழ்வோம் .

0

யாருமே நம்புவதில்லை நாம் வாழும் வாழ்க்கை கொஞ்சக் காலம் தான் என்பதை இப்போ இந்தக் கொறோனா வந்ததும் நம்மில் பலர் உணர்ந்து இருப்பார்கள். ஆம் அது உண்மைதான் என்பதை

வாழும் காலம் கொஞ்சம் ஆனாலும் அந்தக் காலம்வரைக்கும் சந்தோசமாக வாழ்வோம்

 

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

“ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக….ஏதோ சொன்னார் ,

இந்த இடத்தில் அந்தப்பெண்மணி தன் கணவரிடம் என்ன சொல்லியிருப்பார்???” என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்…..

“ஏன் நீ அமைதியாக இருக்கின்றாய்……”

‘எங்களுடைய குழந்தைய கவனமா பாத்துக்கொள்ளுங்கோ என்று சொல்லிருப்பார்  டீச்சர்’

“எப்பிடி சரியாக சொல்கின்றாய், உனக்கு முதலே இந்த கதை தெரியுமா?”

‘இல்ல டீச்சர், எங்கம்மாவும் இறக்கிறதிற்கு முதல்  அப்பாட்ட இதையேதான் சொன்னாவ…’

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்தத்தந்தை வளர்த்து வந்தார்.

அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

‘ உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்… நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது’.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

‘வாழ்கையில நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் .

ஆனால் சில நேரங்களில் அதை எங்களால் புரிஞ்கொள்ள முடியாமல் போகலாம்.

அதனால் நாம் ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிகொள்ளாமலே யார் மீதும் எந்த முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.’

‘நாம் ஹோட்டலுக்குப்போனால் , ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தால் அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம் நட்பை அதிகமா மதிக்கின்றான் என்று அர்த்தம்.

‘முதலில் மன்னிப்பு கேட்கிறவர்கள்  தவறு பண்ணிருக்கின்றார்கள் என்று அர்த்தமில்லை, ஈகோவ(Ego) விட நம் உறவை மதிக்கிறார்கள் என்றே அர்த்தம்.

‘நாம் கண்டுகொள்ளாம விட்டாலும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கின்றார்கள் என்றால்  அவர்கள் வேலை  இல்லாமல் இருக்கின்றார்கள் என்று அர்த்தமில்லை, நாம் அவர்கள் மனதலே இருக்கின்றோம் என்றே அர்த்தம்’.

பின்னொரு காலத்தில ஏதாவது ஒரு கால கட்டத்தில் எமது பிள்ளைகள் கேட்கும்,,,,,

‘”யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவர்கள் எல்லாம்???”‘

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோடு நாம் சொல்லலாம் “அவர்களுடன் பல நல்ல தருணங்களை  கழித்திருக்கின்றோம்.

வாழ்க்கை குறுகியது, ஆனால் அழகானது, வாழ்வோம் , மகிழ்வோம் .

Leave A Reply

Your email address will not be published.